இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ‘பேய்’ என்று ஏ.ஐ.எம் ஐ.எம் தலைவர் ஓவைசி கடுமையாக விமர்சனம் செய்தார்.
பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நடத்தப்படும் அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்துமாறு பிரதமர் மோடியிடம் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். பாலஸ்தீன பிரச்சனை என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, மனிதாபிமானப் பிரசனை. எனவே, காசா மக்களுக்கு ஆதரவாக ஒற்றுமை காட்டுமாறு பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்.
நெதன்யாகு ஒரு பேய், கொடுங்கோலன், போர்க் குற்றவாளி. காசாவில் 10 லட்சம் பேர் வீட்டை இழந்துள்ளனர். உலகமே இதைப் பார்த்து மவுனம் காக்கிறது. காசாவின் இந்த ஏழைகள் உங்களுக்கு என்ன தீங்கு செய்தார்கள்? இந்த விவகாரத்தில் ஒரு தலைப்பட்சமான தகவல் வெளியிடுகின்றனர். கடந்த 70 ஆண்டுகளாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளராக இருந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.