இஸ்ரேல் பிரதமருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்
இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் உடன் பிரதமர் மோடி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பென்னட், தற்போது குணமடைந்துள்ள நிலையில், மோடி தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
இஸ்ரேலில் அண்மையில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும் பிரதமர் தமது தமது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
ரஷியா-உக்ரைன் போர் நிலவரம் உட்பட அண்மைக்கால அரசியல் நிகழ்வுகள் குறித்து இருதலைவர்களும் விரிவாக விவாதித்தனர். பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான
முன்முயற்சிகள் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
பென்னட் விரைவில் இந்தியாவில் வர உள்ள நிலையில் அதை ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பதாகவும் பிரதமர் மோடி கூறியதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.