X

இஸ்ரேல் நாட்டில் நடந்த பயங்கரவாத தாக்குதல் – பலியானவர்களுக்கு அமெரிக்க அதிபர் இரங்கல்

இஸ்ரேல் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள டெல் அவிவ் நகரில் மர்ம நபர் நேற்று திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த தாக்குதலில் 5 பேர் பலியாகினர். அங்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர்.

இஸ்ரேலில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு அந்நாட்டு பிரதமர் நப்தாலி பென்னட் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அரபு பயங்கரவாத அலையில் சிக்கியுள்ளது என பிரதமர் நப்தாலி பென்னட் தெரிவித்தார்.

இஸ்ரேலில் ஒரே வாரத்தில் தொடர்ந்து 3 பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ள நிலையில் பிரதமர் நப்தாலி பென்னட் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட்டை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இஸ்ரேலில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் பலியான 11 பேரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.