X

இளையராஜா பயோபிக் படத்தில் இளையராஜா வேடத்தில் நடிக்கும் தனுஷ்

47 வருடங்களாக இசைத் துறையில் யாரும் தொட முடியாத உச்சத்தில் இருப்பவர் இசைஞானி இளையராஜா.. இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார். இளையராஜாவை இசை ஞானி என்றும் , மேஸ்ட்ரோ என்றும் அழைப்பர். பல விருதுகளை வென்று இருக்கிறார் இளையராஜா. பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றுள்ளார்.

வசீகரிக்கும் மெல்லிசைகளை உருவாக்குவதில் புகழ்பெற்ற இசை மேஸ்ட்ரோ இளையராஜா, இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் இசை ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமானவர். இப்போது, அவரது பணியை நினைவுக்கூரும் வகையில்,அவரது வாழ்க்கை பற்றிய பயோபிக் உருவாகிறது.

இப்படத்தில் இளையராஜா கதாப்பாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். திரைப்படத்தில் இளையராஜா இசையமைப்பாளர் ஆவதற்கு முன் அவர் பயணித்த வாழ்க்கையை எடுத்துக்காட்டும் விதமாக இருக்கும் என கூறப்படுகிறது. படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படத்தை இவர் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.