இளையராஜா இசையில் உருவாகும் ‘கிஃப்ட்’

‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து பிரேமம்’ படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான பிரேமம்’, தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

‘பிரேமம்’ படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோல்டு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து இவர் ‘நெஞ்சுக்கு நீதி’, ‘வீட்ல விஷேசம்’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்த ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு ‘கிஃப்ட்’ என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். இப்படத்தில் சாண்டி, கோவை சரளா, சஹானா சர்வேஷ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil cinema