இளையராஜா இசையமைத்திருக்கும் ஆங்கிலத் திரைப்படம்

ஏறத்தாழ 50 ஆண்டுகாலம் தமிழர்களின் கூடவே கொண்டாட்டம், கோபம், கொதிப்பு, தவிப்பு, சோகம் எல்லாவற்றிலுமே பயணப்பட்டு வந்து கொண்டிருப்பவர் இளையராஜா. திரைப்படத்துறையில் 3 தலைமுறை சக இசையமைப்பாளர்களோடு இளையராஜா இசையமைத்து வருகிறார். கிட்டத்தட்ட 1000 படங்கள். 7000 பாடல்களுக்கு மேல் இளையராஜா இசையமைத்துள்ளார்.

தற்போது ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ என்ற ஆங்கிலப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் ஒரு ரொமாண்டிக் த்ரில்லர் ஆங்கிலத் திரைப்படமாக உருவாகியுள்ளது. அஜித்வாசன் உக்கினா எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் க்ரிஷ் முத்ரகடா மற்றும் மேட்டில்டா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

12வது தாதாசாஹேப் பால்கே திரைப்பட விழா விருதுகளில் சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் பிரிவில் ஸ்ரீகாந்த் கண்டாலாவுக்கும் சிறந்த படத்திற்கான விருதையும் ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ திரைப்படம் பெற்றது. மேலும் சில சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பங்குபெற்று, சிறந்த படமாக இப்படம் தேர்வாகி வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற ‘கம் ஃப்ரீ மீ’ பாடல் உலக இசை தினமான ஜூன் 21 2022 அன்று வெளியிடப்பட்டது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools