X

இளையராஜாவை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த கனிமொழி எம்.பி

இசைஞானி இளையராஜாவின் மகள் பாடகி பவதாரிணி புற்றுநோய் பாதிப்பால் கடந்த 25-ம் தேதி உயிரிழந்தார். பவதாரிணி மறைவு திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது உடல் சொந்த ஊரான தேனியில் அடக்கம் செய்யப்பட்டது.

பவதாரிணி மறைவுக்கு திரையுலகினர், அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டதால் அவரால் உடனடியாக சென்னைக்கு வரமுடியவில்லை.

இந்தநிலையில் சென்னை வந்த கனிமொழி எம்.பி. தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டிற்கு நேற்று நேரில் சென்றார். அங்கு இளையராஜா மற்றும் அவரது மகன் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவுக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார்.

Tags: tamil cinema