Tamilசினிமா

இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தும் தயாரிப்பாளர் சங்கம்!

1000 திரைப்படங்களுக்கு மேலும், 5000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தும், 500-க்கும் மேற்பட்ட பாடல்களை தனது சொந்த குரலில் பாடியும் 5-முறை தேசிய விருதுகளை பெற்று திரையுலகில் இன்றும் மாபெரும் சாதனை படைத்துக்கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக இசையராஜா-75 என்ற பெயரில் அவரை கௌரவிக்கும் பொருட்டு இந்திய அளவில் பிரம்மாண்டமான இசைவிழாவை வெகு சிறப்பாக நடத்த இருக்கிறார்கள்.

மேற்படி விழாவானது, 2019-பிப்ரவரி மாதம் 2-3ம் தேதிகளில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகில் உள்ள அனைத்து முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இளையராஜாவுடன் பணிபுரிந்த இயக்குனர்கள், இசை கலைஞர்கள் பங்கு பெற்று அவருக்கு பெருமை சேர்க்க இருக்கிறார்கள்.

எனவே பிப்ரவரி 2-3 தேதிகளில் அனைத்து படப்பிடிப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு தமிழ்த் திரையுலகில் சார்பாக அனைவரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டு என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

நிபுணன் படத்தில் நடித்த போது படப்பிடிப்பு தளத்தில் தவறாக நடந்து கொண்டார் என அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிஹரன் குற்றம் சாட்டினார். இதற்கு அர்ஜுன் மறுப்பு தெரிவித்ததோடு அவர் மீது வழக்கு தொடர்ந்தார். இதனால் ஸ்ருதி ஹரிஹரனுக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்துள்ளன.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “இது என்னைக் காயப்படுத்தினாலும் பெருமை கொள்ளவும் செய்கிறது. நான் துன்பப்பட்டாலும் எதிர்காலத்தில் சில பெண்களாவது பயப்படாமல் துணிந்து பேசுவார்கள். இதை நடைமுறையில் எப்படி எதிர்கொள்வது என்பதைப் பார்க்க வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு வரை வாரத்திற்கு மூன்று பட வாய்ப்புகளாவது எனக்கு வரும்.

நான் வித்தியாசமான திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பேன். வழக்கமாக நமது படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றால் தான் அடுத்த வாய்ப்புகள் வரும். செப்டம்பர் மாதம் எனது பெரிய படம் ஒன்று வெளியானது. ஆனால் அதன் பின் வாய்ப்புகள் வருவது நின்றுவிட்டது. படவாய்ப்புகள் மிகவும் குறைந்துவிட்டன. என்னுடன் இணைந்து பணியாற்ற தயங்குகிறார்கள்.

ஆனால் இயக்குனர்கள் நம்பிக்கையளிக்கும் விதமாக எனக்காக எழுதுகிறார்கள். இதன் மூலம் எனக்கு சில எதிரிகள் உருவாவார்கள் என்பது தெரியும். அதனால் இதை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து போராடுவேன்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *