இளையராஜாவுக்காக இணைந்த பத்து ஹீரோக்கள்!

2019-ம் ஆண்டு துவங்கியதும் இசைஞானி “இளையராஜா 75” இசை விழாவுக்காக இசைப்பிரியர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வழங்கும் மாஸ்டரோ இசைஞானி இளையராஜாவின் ‘இளையராஜா75’ நிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனை துவக்க விழா சமீபத்தில் மாபெரும் மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதை தொடர்ந்து டிக்கெட் விற்பனை ஆன்லைனில் பரபரப்பாக விற்பனையாகி கொண்டிருக்கிறது.

பிப்ரவரி 2, 3 தேதிகளில், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் – கலை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் என நடக்க இருக்கிறது. ‘இளையராஜா 75’ டீசர் பல உருவாக்கப்பட்டது. அதை, ஒரே நேரத்தில் விஷால், கார்த்தி, விஜய்சேதுபதி, ஜெயம் ரவி, ஆர்யா, விஷ்ணு விஷால், ஜீவா, அதர்வா, சந்தானம் மற்றும் நந்தா ஆகிய 10 கதாநாயகர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்கள்.

பிப்ரவரி 2-ம் தேதி இசைஞானி இளையராஜா அனைத்து மொழி ஜாம்பவான்ங்களுடன் இணைந்து பணியாற்றியதை நினைவு கூர்ந்து கௌரவிக்கும் விதமாக கலைஞர்கள் இளையராஜாவின் பாடல்களுக்கு நடனமாடுகிறார்கள். இதை அவர் விழா காண வந்துள்ள ரசிகர்களுடன் அமர்ந்து ரசிக்க இருக்கிறார். அடுத்தநாள் 3-ம் தேதி இளையராஜா அவரது குழுவினருடன் சேர்ந்து நிகழ்த்தும் மாபெரும் இசை நிகழ்ச்சி பிரமாண்டமாக அமைக்கப்படும் மேடையில் நடைபெறுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools