உலககோப்பை போட்டி தொடர் குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா கூறியதாவது:-
உலக கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த அணியின் கேப்டன் விராட் கோலி மனிதரே அல்ல. அவர் ஒரு ரன் மிஷின். கோலி ரன் குவிக்க ஆரம்பித்துவிட்டால் அவரை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். அவரது ஆட்ட திறன் 80 மற்றும் 90 ஆண்டுகளில் விளையாடிய வீரர்களை நினைவுப்படுத்துகிறது.
என்னை பொறுத்தவரை சச்சின் தெண்டுல்கர் என்றுமே மிகச்சிறந்த வீரர். அவருடன் கோலியை ஒப்பிட முடியாது. ஆனால் கோலியிடம் சிறப்பான திறமைகள் பல உள்ளன. இளம் வீரர்களுக்கு அவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பார்.
அவரது தலைமையில் உலககோப்பையில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என நம்புகிறேன்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் வேகம் அனைத்து அணிகளையும் உற்றுநோக்க வைத்துள்ளது. தற்போது வரை மற்ற பேட்ஸ்மேன்கள் அவரது பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்ள வழிகளை தேடி கொண்டிருக்கிறார்கள்.
நான் அவரது பந்துவீச்சை எதிர்கொள்ள நிலை இருந்தால் எதிர்முனையில் இருக்கும் பேட்ஸ்மேனுக்கு விட்டுவிடுவேன்.
தற்போது பும்ரா சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.