இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா. யார்க்கர் மன்னான இவர் இலங்கை அணிக்கு ஏராளமான வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளார். உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி லீக் சுற்றோடு வெளியேறியது.
இதனால் உலகக்கோப்பையுடன் அவர் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வங்காளதேச அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறார். முதல் ஒருநாள் போட்டி இலங்கை பிரேமதாசா மைதானத்தில் வருகிற 26-ந்தேதி நடக்கிறது.
இந்த போட்டியோடு அவர் ஓய்வு பெறுவதாக என்னிடம் தெரிவித்தார் என கேப்டன் கருணா ரத்னே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருணா ரத்னே கூறுகையில் ‘‘வங்காளதேசத்திற்கு எதிரான முதல் போட்டியில் அவர் விளையாடுவார். அதன்பின் ஓய்வு பெறுகிறார். இது அவர் என்னிடம் கூறியது. ஆனால், தேர்வாளர்களிடம் அவர் என்ன கூறினார் என்று எனக்குத் தெரியாது. என்னிடம் கூறியது ஒரேயொரு போடடியில் மட்டுமே விளையாவார் என்பதுதான்’’ என்றார்.