இலங்கை தமிழ் அரசியல் கைதிகளுக்கு நிவாரண தொகை வழங்கிய லைகா சுபாஸ்கரன்

26 இலங்கை தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து ஒவ்வொருவருக்கும் தலா ரூ.  25 லட்சம் உதவித்தொகை வழங்கியுள்ளார் லைகா குழும தலைவரும் திரைப்பட தயாரிப்பாளருமாகிய சுபாஸ்கரன் .

லைகா குழுமத்தின் நிறுவனரும், தலைவரும் லைகா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் தலா ரூ.  25 லட்சத்தை விடுதலை செய்யப்பட்ட 26 தமிழ் அரசியல் கைதிகளுக்கு சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கியுள்ளார். இந்த நிகழ்வில் லைகா குழும உப தலைவர் பிரேம் சிவசாமி மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இலங்கை ஜனாதிபதியுடன் சந்திப்புகளை மேற்கொண்டு விடாமுயற்சியுடன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அல்லிராஜா சுபாஸ்கரன் வழிவகை செய்துள்ளார். பல்லாண்டுகாலமாக சிறையில் வாடிய கைதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதத்தில் தலா ரூ.  25 லட்சத்தை தனது தாயார் திருமதி ஞானாம்பிகையின் பெயரில் இயங்கி வரும் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் மொத்தம் ஆறரை கோடி ரூபாய்களை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news