X

இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவுக்கு இரண்டு ஆண்டுகள் தடை

இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டை ஐசிசி-யின் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

குற்றச்சாட்டு எழுந்த காலத்தில் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான சனத் ஜெயசூர்யா தேர்வுக்குழு தலைவராக இருந்தார். இவரிடம் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்த முடிவு செய்தது.

சனத் ஜெயசூர்யா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. அத்துடன் முக்கியமான ஆவணங்களை மறைத்து விட்டதுடன், ஆதாரங்களை அழித்து விட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் ஐசிசி அவருக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் அவர் எந்தவொரு கிரிக்கெட்டிலும் செயல்பட முடியாது.

Tags: sports news