X

இலங்கையில் அவசர சுகாதார நிலை பிரகடனம்

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோருக்கு கடும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், தலைநகர் கொழும்பில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

அதிபர் மற்றும் பிரதமரின் மாளிகையை நோக்கி நேற்றும் மக்கள் பேரணியாக சென்றனர். மேலும் கார்கள் உள்பட பிற வாகனங்களில் சென்றவர்கள், ஒரே நேரத்தில் ஹாரன் அடித்து மக்களின்
போராட்டத்திற்கான தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

பொதுமக்கள் பேரணியை அடுத்து அமைச்சர்கள் உள்பட முக்கிய பிரமுகர்களின் இல்லங்கள் அருகே தடுப்புகள் போடப்பட்டிருந்தன.

இந்நிலையில் இலங்கை அதிபர் மற்றும் பிரதமர் மாளிகை அருகே போடப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்த போராட்டக்காரர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

இதனிடையே இலங்கையில் கடும் மருந்து தட்டுப்பாடு நிலவுவதால், செவ்வாய்க்கிழமை முதல் அவசர சுகாதார நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவ அதிகாரிகள் சங்க அவசர
பொதுக்குழு கூட்டத்தின் பின்னர் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளின் உயிரைப் பாதுகாப்பதற்காக
அவசர சுகாதார நிலை பிரகனடப்படுத்தப் பட்டுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.இதையடுத்து மருத்துவமனைகள் அருகே ராணுவ வீரர்கள் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.