X

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி – பாகிஸ்தான் 2ம் நாள் இறுதியில் 5/221

பாகிஸ்தான்- இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 312 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தனஞ்செயா டி சில்வா பொறுப்புடன் ஆடி சதமடித்து 122 ரன்னும், மேத்யூஸ் அரை சதமடித்து 64 ரன்னும் எடுத்தனர்.

பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் பாகிஸ்தான் 101 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

6வது விக்கெட்டுக்கு இணைந்த ஷகீல், ஆகா சல்மான் ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் அரை சதம் கடந்தனர். இறுதியில், 2ம் நாள் முடிவில் பாகிஸ்தா 5 விக்கெட்டுக்கு 221 ரன்கள் எடுத்துள்ளது. ஷகீல் 69 ரன்னும், ஆகா சல்மான் 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட் வீழ்த்தினார்.

Tags: tamil sports