இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – ஆப்கானிஸ்தான் வெற்றி

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது.

இந்நிலையில், முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 268 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அசலங்கா பொறுப்புடன் ஆடி 91 ரன்கள் எடுத்தார். டி சில்வா 51 ரன்னும் எடுத்தார். நிசாங்கா 38 ரன் சேர்த்தார்.

இதையடுத்து, 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் ஜட்ரன் பொறுப்புடன் ஆடி 98 ரன்னில் அவுட்டானார். ரஹ்மத் ஷா 55 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹஸ்மத்துல்லா ஷாகிடி 38 ரன்னில் அவுட் ஆனார்.

இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 46.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணி முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் வரும் 4-ம் தேதி நடைபெற உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools