இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், அடுத்தடுத்து புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி வருகிறது. இதன் எதிரொலியால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டில் மழை அதிகளவில் பதிவாகி உள்ளது.
இந்நிலையில், தெற்கு அந்தமான் மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடலில் நாளை ஒரே நாளில் இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதன்படி, இன்னும் 12 மணி நேரத்தில் தெற்கு அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து பின் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மேற்கு வடமேற்கு திசையில் நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.