Tamilசெய்திகள்

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு புத்தாண்டில் அனுமதி – புதுச்சேர் சுகாதாரத்துறை

ஒமைக்ரான் வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடைவிதித்துள்ளன. இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட முடியாது.

ஆனால், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் தற்போது ஒமைக்ரான் தொற்று பரவியுள்ளது. இதனால் புத்தாண்டு கொண்டாட்ட முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும், புத்தாண்டு அன்று நள்ளிரவு ஒரு மணி வரை மதுபானம் விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். டிசம்பர் 31-ந்தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே ஓட்டல்கள், ரெஸ்டாரன்ட்கள், மால்கள், சினிமா தியேட்டர்கள் அனுமதிக்க வேண்டும் என்றார்.

மேலும், பாண்டிச்சேரியில் 8.24 லட்சம் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியும், 5.40 லட்சம் 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அறிவித்தன்படி, அடுத்த மாதத்தில் இருந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும். 15 முதல் 18 வரையிலான பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த இருக்கிறோம். பள்ளியில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு வீட்டிற்கு சென்று செலுத்தப்படும் என்றார்.