இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டால் டிவி இலவசம் – பீகார் அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக முதல் ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தி விட்டு, இரண்டாவது ‘டோஸ்’ தடுப்பூசி போடாமல் தவற விடுபவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள்.

இதனால்தான் பீகாரில் 2-வது ‘டோஸ்’ தடுப்பூசி போட்டுக்கொள்கிறவர்களுக்கு மாபெரும் பரிசுத்திட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள். லாட்டரி குலுக்கல் மூலம் பரிசுக்குரியவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

டி.வி., பிரிட்ஜ், கிரைண்டர், கியாஸ் ஸ்டவ், மின்விசிறி, போர்வை என பரிசுப்பட்டியல் நீளுகிறது.

இதுகுறித்து அந்த மாநில சுகாதார மந்திரி மங்கள் பாண்டே கூறும்போது, “கொரோனா வைரஸ்   தொற்றில் இருந்து மக்களை காக்கவும், தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தவும்தான் இந்த நடவடிக்கையை சுகாதாரத்துறை எடுத்துள்ளது” என தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools