X

இரட்டை சிலை சின்னம் பெறுவது குறித்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுடன் ஆலோசனை

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் ஈபிஎஸ் உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆலோசனையில், தங்கள் தரப்பு வேட்பாளர் தேர்வு, விருப்ப மனு பெறுவது உள்ளிட்ட விஷயங்கள் பேசப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தேர்தலில் விருப்பமனு பெறுவது தொடர்பாக இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த இரு தினங்களாக எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.