வெங்கட் பிரபு வெளியிட்ட ‘நான் வயலன்ஸ்’ படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்!
தமிழில் மெட்ரோ மற்றும் கோடியில் ஒருவன் படங்களை இயக்கியவர் ஆனந்த கிருஷ்ணன். இவர் தற்போது இயக்கும் புதிய படத்தில் பாபி சிம்ஹா, மெட்ரோ சிரிஷ் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது. படத்திற்கு ‘நான் வயலன்ஸ் (NON Violence) என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளர் எஸ்.எஸ் தமன் நேற்று (மே 29) வெளியிடுவதாக தகவல் வெளியானது. அதன்படி நேற்று காலை காலை 11 அளவில் இருவரும் தங்களது எக்ஸ் தள பக்கத்தில் ‘நான் வயலன்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
ஏ.கே. பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் தொடர்பான இதர அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இந்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் எடுக்கப்பட்டு வருவைது குறிப்பிடத்தக்கது.