X

இயக்குனர் பாலா படப்பிடிப்பில் என்னை அடித்ததால் தான் விலகினேன் – நடிகை பரபரப்பு புகார்

இயக்குநர் பாலா, சூர்யா நடிப்பில் ‘வணங்கான்’ படத்தை இயக்கினார். ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், திடீரென படம் கைவிடப்பட்டது. பின்னர், இந்தப் படத்தில் இருந்து சொந்த காரணங்களுக்காக சூர்யா திடீரென விலகினார்.

இதையடுத்து, இந்தப் படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். மிஷ்கின், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். பாலா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டீசர் கடந்த 19-ம் தேதி வெளியானது.

இந்நிலையில், வணங்கான் படத்தில் நடித்த பிரபல மலையாள நடிகை மமிதா பைஜூ, “வணங்கான் படப்பிடிப்பில் பாலா தன்னை தோள் பட்டையில் அடித்தார்” என தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘பிரேமலு’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

இதுகுறித்து நடிகை மமிதா பைஜூ கூறுகையில், “வணங்கான் படத்தில் முதலில்நான் நடித்திருந்தேன். அப்படத்தில் ஒரு பாடலுக்கு மேலளம் அடித்தபடி பாடிக்கொண்டே ஆட வேண்டும். நான் அப்போது தான் அதை கற்றுக் கொண்டேன். ஆனால், இயக்குனர் பாலா தான் அதை உடனே செய்து காட்டும்படி கூறினார்.

நான் அதற்கு தயாராக இல்லை என்பதால் பதற்றமாகிவிட்டேன். அப்போது, பின்னாலில் இருந்த இயக்குனர் பாலா தனது தோள்பட்டையில் அடித்தார். நான் அவ்வபோது திட்டுவேன். அப்போது பெரிதா எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று இயக்குனர் பாலா கூறுவார். சூர்யா சார் ஏற்கெனவே அவரோடு படம் பண்ணியிருப்பதால் புதிதாக இணைந்த எனக்குதான் அது புதிதாக இருந்தது” என்றார்.