இயக்குநர் வெங்கட் பிரபுக்கு கோல்டன் விசா வழங்கி கெளரவித்த ஐக்கிய அரபு அமீரகம்
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’, ‘மன்மத லீலை’ போன்ற படங்கள் வெற்றியடைந்ததை அடுத்து தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாக சைதன்யாவை நடிக்கும் புதிய படத்தை இயக்க ஆயத்தமாகி வருகிறார். இதைத் தொடர்ந்து ஐக்கிய அமீரகத்தின் கெளரவத்தை வெட்கட் பிரபு பெற்றுள்ளார்.
ஐக்கிய அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்து வருகின்றனர். அதன்படி, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதலா உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, தென்னிந்தியாவைச் சேர்ந்த மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலா பால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா உட்பட பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மீனா ஆகியோர் இந்த விசாவை பெற்றிருந்தனர்.
தற்போது வெங்கட் பிரபுவுக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசாவை வழங்கியுள்ளது. இதனை சிறப்பிக்கும் விதமாக வெங்கட் பிரபு கேக் வெட்டி கொண்டியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. கோல்டன் விசா ஐக்கிய அமீரகத்தின் குடியுரிமை போன்றது. இந்த விசாவை வைத்திருப்பவர்கள் பத்து வருடங்களுக்கு அந்நாட்டின் குடிமகன்களாக கருதப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.