X

இயக்குநர் லிங்குசாமி படத்தில் இணைந்த நடிகை அக்‌ஷரா கவுடா

தமிழில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான ‘ஆனந்தம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. இதையடுத்து ரன், பையா, சண்டக்கோழி என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்த இவர், தற்போது ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகும் இப்படத்தில் நடிகர் ஆதி வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் ஆதிக்கு ஜோடியாக நடிக்க அக்‌ஷரா கவுடா ஒப்பந்தம் ஆகி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர் தமிழில், அஜித்துடன் ஆரம்பம், விஜய்யுடன் துப்பாக்கி, ஜெயம் ரவி உடன் போகன் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.