ராஜமவுலி திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகள், கதாநாயகனுக்கு சமமாக பேசப்படுவார்கள். தற்போது அவர் இயக்கிக் கொண்டிருக்கும் ஆர்ஆர்ஆர் படத்திற்கு இதுவரை நாயகி மற்றும் மற்ற நடிகர் பற்றிய அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில், தற்போது நடிகை பிரியா மணி, ராஜமவுலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக நடிப்பது யார் என்பது இன்னும் முடிவாகாத நிலையில், பிரியாமணி நடிப்பது உறுதியாகியிருக்கிறது.
இவர் நாயகியாகவா அல்லது மற்ற கதாபாத்திரமா என்பது முறையான அறிவிப்புக்குப் பின்னரே தெரிய வரும்.