Tamilசினிமா

இயக்குநர் ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தற்போது இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாக்கி உள்ளனர்.

இந்நிலையில், உக்ரைன் நாட்டில் நடைபெற்று வந்த இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 13-ந் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்படாததால், ஆர்.ஆர்.ஆர் படக்குழு ரிலீஸ் தேதியை மாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் புதிய ரிலீஸ் தேதியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.