இயக்குநர் பா.இரஞ்சித்தின் உதவி இயக்குநர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
சென்னை அபிராமபுரத்தில் கடந்த ஏப்ரல் 30ம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கவிஞரும், பா.இரஞ்சித்தின் உதவி இயக்குனருமான விடுதலை சிகப்பி, இந்து கடவுளை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது.
அதன்பின்னர் பாரத் இந்து முன்னணி அமைப்பின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் சுரேஷ் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் இந்து கடவுளை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பா.இரஞ்சித்தின் உதவி இயக்குனரும், கவிஞருமான விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கலகத்தை தூண்டுதல், எந்த ஒரு மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.