இயக்குநர் சிறுத்தை சிவாவை புகழ்ந்த ரஜினிகாந்த்
ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை கொடுத்தார்கள்.
இந்நிலையில் இப்படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில், இயக்குனர் சிவா ‘அண்ணாத்த’ கதை சொல்லும்போதே என் கண்கள் கலங்கின. ’அண்ணாத்த’ படம் உங்கள் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் என சிவா அப்பவே சொன்னார். அதே மாதிரி சொல்லி அடித்திருக்கிறார்’ என்று பதிவு செய்திருக்கிறார்.
அண்ணாத்த படத்தில் ரஜினியுடன், குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பாண்டியராஜ், சத்யன், லிவிங்ஸ்டன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.