Tamilசினிமா

இயக்குநர் அமீர் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்!

பிரபல திரைப்பட இயக்குநர் அமீர், தனது அமீர் பிலிம் கார்ப்பரேசன் நிறுவனம் சார்பில், ஜே.எஸ்.எம் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரிப்பதோடு, அதில் ஹீரோவாகவும் நடிக்கிறார். அவருடன் நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா மற்றொரு ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை சினேகன் எழுதுகிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். வீரமணி கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

‘அதர்மம்’, ‘பகைவன்’ ஆகிய படங்களை இயக்கிய ரமேஷ் கிருஷ்ணன் இயக்கும் இப்படத்தின் போட்டோ ஷூட் நேற்று நடைபெற்றது.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் விரைவில் துவங்க இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.