தென்மேற்கு பருவமழையால் இமாச்சல பிரதேசம் அதிகபட்ச மழைப்பொழிவை பெற்றுள்ளது. இதனால் கடும் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு மோசமான பாதிப்புகளையும் எதிர்கொண்டு உள்ளது. அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மேகவெடிப்பு ஏற்பட்டு பேய்மழை கொட்டி வருகிறது.
கடந்த 3 நாட்களில் மட்டும் இயல்பைவிட 157 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளது. மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை ஆயிரக்கணக்கான வீடுகள், அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் அழிந்துள்ளது. அத்துடன் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து அங்கு மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இமாச்சல பிரதேசம் முழுவதையும் இயற்கை பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
![AddThis Website Tools](https://cache.addthiscdn.com/icons/v3/thumbs/32x32/addthis.png)