X

இன்றைய ராசிபலன்கள்- மார்ச் 20, 2019

மேஷம்: உங்கள் எண்ணமும் செயலும் உற்சாகம் பெறும். மற்றவருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள்.

ரிஷபம்: செயல்களில் தடுமாற்றம் ஏற்படலாம். கடினமான பணிகளில் விழிப்புடன் ஈடுபடவும்.

மிதுனம்: முக்கியஸ்தரின் அன்பை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய சாதனை உருவாகும். வருமானம் அதிகரிக்கும்.

கடகம்: அன்பு வழியில் பிறருக்கு நன்மை செய்வீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை திருப்திகரமாக இருக்கும்.

சிம்மம்: முன்யோசனையுடன் செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணி உருவாகும்.

கன்னி: உங்களின் தேவைகளில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். தொழிலில் திட்டமிட்ட வளர்ச்சி பெற கால அவகாசம் தேவைப்படும்.

துலாம்: நண்பரிடம் கேட்ட உதவி வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணியை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம்: புதியவர்களின் அறிமுகம் மனதில் ஊக்கம் தரும். தொழில், வியாபார நடைமுறையில் நவீன மாற்றம் செய்வீர்கள்.உபரி வருமானம் கிடைக்கும்.

தனுசு: வழக்கத்திற்கு மாறான பணி தொந்தரவு தரலாம். தொழில், வியாபார நடைமுறை சீராக நண்பரின் உதவி ஓரளவு கிடைக்கும்.

மகரம்: சொந்த திறமையை பயன்படுத்தி ஓரளவு நன்மை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உருவாகிற இடையூறு சரிசெய்வதால் உற்பத்தி விற்பனை சீராகும்.

கும்பம்: புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் கொள்வீர்கள். தொழிலில் முன்னேற்றம் பெற தேவையான மாற்றம் செய்வீர்கள்.

மீனம்: எதிர்கால சூழலை கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் கூடுதல் உழைப்பால் வளர்ச்சி சீராகும்.