X

இன்றைய ராசிபலன்கள்- மார்ச் 30, 2019

மேஷம்: குடும்ப விவகாரத்தி்ல் நல்ல தீர்வு ஏற்படும்.. நிலுவைப் பணம் வசூலாகும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.

ரிஷபம்: முன்யோசனையுடன் பிறரிடம் இருந்து உதவி பெறுவது நல்லது. மிதமான பணவரவு கிடைக்கும். பிள்ளைகளால் உதவி உண்டு.

மிதுனம்: உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை நிறைவேற்றுவீர்கள்..

கடகம்: தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். பணவரவு அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்க அனுகூலம் உண்டு.

சிம்மம்: புதிய முயற்சிகளை பின்னொரு அனுகூல நாளில் துவங்கலாம். பெண்கள் குடும்பநலனுக்காக பாடுபடுவர்.

கன்னி: பிறரது நல்ல கருத்தை ஏற்றுக் கொள்வீ்ர்கள். குடும்பத்தினர் ஆதரவுடன் செயல்படுவர்.

துலாம்: நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் அதிகரிக்கும்.

விருச்சிகம்: தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்க நவீன மாற்றம் செய்வீர்கள். கொடுக்கல் வாங்கல் சீராகும். வெகுநாள் பிரச்னைக்கு சுமுக தீர்வு கிடைக்கும்.

தனுசு: தொழில், வியாபார நடைமுறை சராசரி அளவில் இருக்கும். சேமிப்புப் பணம் திடீர் செலவால் கரையும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மகரம்: பொறுப்புணர்வுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும்..

கும்பம்: நண்பருக்கு உதவி செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும்.

மீனம்: வெளியூர் பயணத்தில் திடீர் மாறுதல் ஏற்படலாம். மாணவர்கள் பாதுகாப்பில்லாத இடங்களுக்கு செல்ல வேண்டாம். உறவினர்களின் ஆதரவு ஆறுதல் தரும்.