X

இன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 6, 2019

மேஷம்: உறவினரிடம் கருத்துவேறுபாடு உருவாகலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர்.

ரிஷபம்: அன்பால் அனைவரையும் அரவணைப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் தாராள அளவில் பணவரவு கிடைக்கும். பணக்கடனில் ஒருபகுதி அடைபடும்.

மிதுனம்: பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். மின் உபகரணங்களை கவனமுடன் கையாளவும்.

கடகம்: அன்றாடப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும்.

சிம்மம் :தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும்.

கன்னி: நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.

துலாம்: பணவரவுக்கேற்ப செலவும் உயரும். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர்.

விருச்சிகம் ஆரோக்கியம் மேம்படும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சீரான வளர்ச்சி காண்பர்.

தனுசு: பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். உறவினர் வருகையால் செலவு கூடும்.

மகரம்: தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். வீடு, வாகன வகையில் திடீர் செலவு ஏற்படும்.

கும்பம்: கடந்த கால உழைப்பின் பயனைப் பெறுவீர்கள். தொழில்,வியாபாரத்தில் நவீன மாற்றங்களைச் செய்வீர்கள்.

மீனம்: பேச்சில் புத்துணர்வு வெளிப்படும். தொழிலில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். லாபம் பன்மடங்கு உயரும்.