Tamilஜோதிடம்

இன்றைய ராசிபலன்கள்- டிசம்பர் 2, 2019

மேஷம்: முக்கிய செயலை பொறுப்புடன் நிறைவேற்றுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் மறைமுகப் போட்டி அதிகரிக்கும்.

ரிஷபம்: பிறரிடம் அதிகம் பேச வேண்டாம். தொழிலில் இருக்கிற அனுகூலம் பாதுகாக்கவும். லாபம் சீராக இருக்கும்.

மிதுனம்: பணிகளில் உற்சாகமுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும்.

கடகம்: பேச்சில் திறமை வெளிப்படும். தொழில், வியாபாரம் செழிக்கும். விற்பனை அதிகரிப்பால் லாபம் பெருகும்.

சிம்மம்: எதிலும் நிதானம் பின்பற்றவும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற அக்கறையுடன் செயல்படுவது நல்லது.

கன்னி: பொறுமையுடன் செயல்படுவது அவசியம். தொழில் சார்ந்த குறையை பிறரிடம் விவாதிக்க வேண்டாம்.

துலாம்: நற்செயலில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வு உருவாகும்.

விருச்சிகம்: பணிகளில் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் வளர அனுபவசாலியின் ஆலோசனை உதவும். சேமித்த பணம் திடீர் செலவால் கரையும்.

தனுசு: வீண் பேச்சு பேசுபவரிடம் விலகியிருக்கவும். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வர்.

மகரம்: சிலரது அவசியமற்ற பேச்சு சங்கடம் உருவாக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைவேற்ற வேண்டிய பணியால் மலைப்பு உண்டாகும்.

கும்பம்: மதிநுட்பத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். சிறிய முயற்சியும் அதிக அளவில் நன்மை தரும்.

மீனம்: திட்டமிட்ட செயல்களை நேர்த்தியுடன் நிறைவேற்றுவீர்கள். மனதில் நிம்மதியும், பெருமிதமும் ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *