இன்றைய ராசிபலன்கள்- ஜூன் 3, 2019
மேஷம்: முக்கிய விஷயத்தில் சுமுகத்தீர்வு ஏற்படும். பணியை முழுமனதுடன் நிறைவேற்றுவீர்கள்.
ரிஷபம்: உங்களின் முக்கிய செயல் ஒன்று நிறைவேற தாமதமாகலாம். சேமிப்பு பணம் முக்கிய செலவுகளுக்கு பயன்படும்.
மிதுனம்: குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வியாபாரத் தொடர்பு பலம் பெறும்.
கடகம்: உங்கள் செயல் நிறைவேற இஷ்ட தெய்வ அருள்பலம் துணை நிற்கும்.எதிர்மறையாக இருந்த விஷயங்கள் அனுகூலம் தரும்.
சிம்மம்: அடுத்தவரின் விவகாரத்தில் கருத்து சொல்ல வேண்டாம். குடும்பத்தேவை நிறைவேற தாமதமாகலாம்.
கன்னி: செயலில் திறமை வெளிப்படும். அலைச்சல் தந்த வேலை ஆதாயம் தருவதாக மாறும்.
துலாம்: சமயோசித புத்தியால் சில நன்மை பெறுவீர்கள்.மனதில் மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் ஏற்படும்.
விருச்சிகம்: உங்கள் எண்ணமும் செயலும் உற்சாகம் பெறும். வாழ்வில் வளம் பெற புதிய வாய்ப்பு உருவாகி வளரும்.
தனுசு: எதிர்பார்த்த உதவி குறைந்த அளவில் கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாரான அளவில் இருக்கும்.
மகரம்: சிலர் சுயநலத்துடன் உங்களிடம் பழகலாம். விழிப்புடன் விலகுவது நல்லது.
கும்பம்: எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
மீனம்: முக்கிய செயலை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உள்ள சிரமத்தை உடனடியாக சரி செய்வது நல்லது.