Tamilஜோதிடம்

இன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 11, 2020

மேஷம்: உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்யலாம். உண்மை, நேர்மைக்கு முக்கியத்துவம் தருவீர்கள்.

ரிஷபம்: முயற்சிக்குரிய பலன் முழு அளவில் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த தொந்தரவு விலகும்.

மிதுனம்: அடுத்தவர் மீதான நம்பிக்கை குறையும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவீர்கள்.

கடகம்: நண்பரிடம் மனம் விட்டு பேசுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க தேவையான அனுகூலம் உண்டாகும்.

சிம்மம்: அறிமுகம் இல்லாதவர்களிடம் பொது விஷயம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் ஏற்ற இறக்கத்தை சந்திக்க வாய்ப்புண்டு.

கன்னி: நண்பர் உங்களின் நற்செயலை பாராட்டுவார். ஆன்மிக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் அதிகரிக்கும்.

துலாம்: உங்களிடம் பலரும் நல்லெண்ணத்துடன் பழகுவர். உற்சாக மனதுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபார வளர்ச்சி இலக்கு திட்டமிட்டபடி நிறைவேறும்.

விருச்சிகம்: அனுபவசாலியின் ஆலோசனையை ஏற்பது நல்லது. தொழில் வியாபார நடைமுறை சீராக இருக்கும்.

தனுசு: மனதில் எதிர்பார்ப்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் மந்தகதியில் இயங்கும். அளவான பணவரவு கிடைக்கும்.

மகரம்: மகிழ்ச்சியால் மனம் உற்சாகத்துடன் இருக்கும். சிறு செயலையும், நேர்த்தியுடன் செய்வீர்கள்.

கும்பம்: தாயின் அன்பும் ஆசியும் கிடைக்கும். பணிகளை திறம்பட நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும்.

மீனம்: உங்கள் செயல்களில் கவனச் சிதறல் ஏற்படலாம். தொழில், வியாபாரம் சிறக்க கூடுதல் உழைப்பு மட்டுமே உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *