X

இன்றைய ராசிபலன்கள்- ஏப்ரல் 23, 2019

மேஷம்: நடைமுறை வாழ்வில் வளர்ச்சி பெற தகுந்த பணிபுரிவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் வருமானம் பெருகும்.

ரிஷபம்: எதிர்கால வளர்ச்சி குறித்து திட்டமிடுவீர்கள். இஷ்டதெய்வ அருளால் தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும்.

மிதுனம்: திட்டமிட்ட செயல் நிறைவேற தாமதம் உண்டாகும். வியாபாரம் சராசரி அளவில் இருக்கும்.

கடகம்: சிலரது பேச்சு உங்களின் மனதை பாதிக்கலாம். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி நிறைவேற்றுவது நல்லது. பணவரவு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

சிம்மம்: அனைவரிடமும் உயர்வு தாழ்வு கருதாமல் பழகுவீர்கள். சிறுசெயலும் நேர்த்தியுடன் அமைந்திடும்.

கன்னி: மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை நல்வழிக்கு வழிவகுக்கும்.

துலாம்: பேச்சின் மங்கலத் தன்மை நிறைந்திருக்கும். புதியவர்களின் நட்பும் உதவியும் கிடைக்கும்.

விருச்சிகம்: கூடுதல் பொறுப்பை ஏற்கும் கட்டாய சூழ்நிலை ஏற்படலாம். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற அதிக உழைப்பு தேவைப்படும்.

தனுசு: மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்திருக்கும். வாழ்வியல் நடைமுறை சீராக இருக்கும்.

மகரம்: உறவினர் அதிக அன்பு பாசத்துடன் நடந்து கொள்வர். தொழிலில் உற்பத்தி விற்பனையின் அளவு அதிகரிக்கும்.

கும்பம்: சிறிய வேலைக்கும் அதிக முயற்சி தேவைப்படலாம். தொழில், வியாபாரத்தில் உள்ள மந்த நிலையை சரிசெய்வது நல்லது.

மீனம்: நல்ல நண்பரின் உதவி ஊக்கம் தரும். தொழில், வியாபாரத்தில் இருந்த சிரமம் குறையும்.