X

இன்றைய ராசிபலன்கள்- ஆகஸ்ட் 27, 2019

மேஷம்: கடந்த கால நற்செயலுக்கான நற்பலன் தேடி வரும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.

ரிஷபம்: நிர்ப்பந்தத்தின் பேரில் கடன் வாங்க வேண்டாம். இஷ்ட தெய்வ வழிபாடு நிம்மதிக்கு வழிவகுக்கும்.

மிதுனம்: குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.. பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர்.

கடகம்: தொழில், வியாபாரம் தொடர்பாக யாரிடமும் சச்சரவு பேச வேண்டாம். லாபம் சுமாராக இருக்கும்.

சிம்மம்: திறமையை வெளிப்படுத்தி நற்பெயர் காண்பீர்கள். தாமதமான பணி எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வியத்தகு முன்னேற்றம் பெறும்.

கன்னி: தொழில், வியாபாரம் அபரிமிதமான முன்னேற்றம் பெறும். ஆதாய பணவரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு நற்பெயர் உண்டாகும்.

துலாம்:. பணியாளர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர்.

விருச்சிகம்: லாபம் பன்மடங்கு உயரும். பணியாளர்கள் பணிச்சுமையில் இருந்து விடுபடுவர். நண்பரால் உதவி உண்டு.

தனுசு: உறவினரிடம் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் தாராள பணவரவு கிடைக்கும்.

மகரம்:. லாபம் படிப்படியாக உயரும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் பாராட்டை பெறுவர். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

கும்பம்: குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையில் இருந்து விடுபடுவர்.

மீனம்:. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. குழந்தைகளின் நற்செயல் ஆறுதல் தரும்.