சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.
நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.
தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் சில தினங்களுக்கு முன் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது.
சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 99.32 ரூபாய், டீசல் லிட்டர் 93.66 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.