Tamilசெய்திகள்

இன்று வழக்கம் போல் பங்குச்சந்தை இயங்குவதாக அறிவிப்பு

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அம்மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான 22-ம் தேதியன்று மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகளுக்கு அரைநாள் விடுமுறை அளித்து மத்திய அரசு அறிவித்தது.

இதற்கிடையே, 22-ம் தேதியன்று பங்குச்சந்தைகள் அனைத்தும் காலை 9 மணிக்கு பதிலாக மதியம் 2.30 மணிக்கு திறக்கப்பட்டு, மாலை 5 மணிவரை செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்நிலையில், வரும் திங்கட்கிழமை அரைநாள் விடுமுறை அளிக்கப்படுவதால் இன்று பங்குச்சந்தைகள் காலை 9.15 மணி முதல் 3.30 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலுவையில் உள்ள அனைத்து பரிவர்த்தனைகளின் தீர்வும் வரும் 22-ம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.