Tamilசெய்திகள்

இன்று முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தற்போது 2-ம் கட்ட பிரசார சுற்றுப்பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) புவனகிரி, குறிஞ்சிபாடி, கடலூர், பண்ருட்டி, இந்திராநகர், விருத்தாச்சலம், அரியலூர், குன்னம், பெரம்பலூர் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

நாளை (சனிக்கிழமை) கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், விக்கிரவாண்டி, மயிலம், திருச்சிற்றம்பலம், திண்டிவனம், 21-ந்தேதி வந்தவாசி, செய்யார், ஆரணி, போளூர், கலசபாக்கம், திருவண்ணாமலை, செங்கம், ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி 22-ந்தேதி ஓசூர், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, தர்மபுரி, மொரப்பூர், ஒடசல்பட்டி கூட்டு ரோடு, காடையாம்பட்டி, ஓமலூர்.

மேற்கண்ட தகவல் அ.தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.