சென்னை மாநகராட்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், சென்னையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பொது இடங்களில் முககவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சென்னையில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் இன்று (ஜூலை 7) முதல் கட்டாயம் முக கவசம் அணியவேண்டும். மேலும் மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு வந்து செல்வோரும் முக கவசம் அணிய வேண்டும்.
என தெரிவித்துள்ளது.