Tamilசெய்திகள்

இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 18 காசுகள் குறைந்தது

நாடு முழுவதும் வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வந்தன . இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை குறைவால் சென்னையில் 2வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை  லிட்டருக்கு 18 காசுகள் குறைந்து, 92.77 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து 86.10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை குறைப்பு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.