Tamilசெய்திகள்

இன்னும் 2 ஆண்டுகளில் பிபிஓ பிரிவில் 80 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் – மத்திய அமைச்சர் தகவல்

இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மென்பொருள் ஏற்றுமதி வளர்ச்சிக் கவுன்சில் சார்பில், டெல்லியில் தேசிய அளவிலான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பங்கேற்ற கருத்தரம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய மத்தியமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளதாவது:

மின்னணுவியல் மற்றும் பிபிஓ பிரிவில் எதிர்வரும் 2 ஆண்டுகளில் 10 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன. இதில் மின்னணுவியல் துறையில் மட்டும் 2.5 முதல் 3 மில்லியன் வேலைவாய்ப்புகளும், பிபிஓ பிரிவில் 8 மில்லியன் வேலைவாய்ப்புகளும், எதிர்வரும் 2 ஆண்டுகளில் கூடுதலாக உருவாக்கப்படும். இதனை ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் சாத்தியமாக்கும். இதனால்தான், மத்திய அரசு, ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.

அறிவாற்றல், கனிணி சார்ந்த கல்வியறிவு ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையின் அம்சம். தகுதி, திறமை மற்றும் புத்தாக்க முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆரோக்கியமான சூழலை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.