X

இன்சமாம் உல் ஹக்கை ஒரு முறை கூட அவுட் ஆக்க முடியவில்லை – சோயிப் அக்தர்

கிரிக்கெட் உலகில் யார் வேகமாக பந்து வீசக்கூடியவர் என்ற போட்டி சோயிப் அக்தர், பிரெட் லீ இடையே நடைபெற்றது. சோயிப் அக்தர் மணிக்கு 161.3 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி சாதனைப் படத்தார். பிரெட் லீயும் 100 மைல் வேகத்தில் பந்து வீசினார்.

இவர்கள் இருவரும் விளையாடிய காலத்தில் எதிரணி பேட்ஸ்மேன்கள் இவர்களது பந்தை எதிர்கொள்ள பயப்படுவார்கள். ஆனால், பாகிஸ்தான் அணியின் இன்சமாம் உல் ஹக் மற்ற பேட்ஸ்மேன்களை விட விரைவாக பந்து வீசும் ஆக்சனை கணித்து விடுவார். அவரை என்னால் ஒருமுறை கூட அவுட்டாக்க முடியவில்லை என்று சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சோயிப் அக்தர் கூறுகையில் ‘‘உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இன்சமாம் உல் ஹக்தான். பிரெட் லீயை காட்டிலும் என்னுடைய பந்து வீச்சுமுறை சிக்கலானது. ஆனால், 10 ஆண்டுகளில் வலைப்பயிற்சியின் போது கூட இன்சமாம் உல் ஹக்கை என்னால் அவுட்டாக்க முடியவில்லை. மற்ற பேட்ஸ்மேன்களை விட பந்து வீச்சு ஆக்சனை அவரால் துல்லியமாக கணித்து விட முடியும் என்று நினைக்கிறேன்.

மார்ட்டின் குரோவ் என்னுடைய பந்தை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடி இருப்பார். அவர் ஒரு மேஜிக் பேட்ஸ்மேன். மிகவும் நேர்த்தியானவர். இந்திய பேட்ஸ்மேன்களில் ராகுல் டிராவிட் மிகவும் ஸ்டைலான பேட்ஸ்மேன். அவர் ஒரு பந்தை அடிக்கும் வாய்ப்பை எனக்கு கொடுக்கவில்லை என்றால், அவரது தடுப்பாட்டத்தை என்னுடைய பந்தால் ஊடுருவ முடியாது. கல்லீஸ் சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவர். அவரை போன்ற ஸ்லிப் பீல்டரை கிரிக்கெட் உருவாக்கவில்’’ என்றார்.

Tags: sports news