ரங்கீலா, அமிதாப் பச்சனின் சர்கார் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ராம் கோபால் வர்மா, சூர்யாவின் ரத்த சரித்திரா படத்தையும் இயக்கி இருந்தார். சமீப காலமாக நேக்கட், கிளைமேக்ஸ், காட் செக்ஸ் ட்ரூத் என கவர்ச்சிகரமான படங்களை இயக்கி வரும் ராம் கோபால் வர்மா தன் பேச்சால் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இவர் இனிமேல் இந்தி படங்கள் வெற்றி பெறாது என்ற கண்ணோட்டத்தை ‘பதான்’ மாற்றியமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், ” பாலிவுட் படங்கள் இனி ஓடாது என்ற கண்ணோட்டத்தை ‘பதான்’ திரைப்படம் மாற்றியமைத்தது. ‘காந்தாரா’, ‘ஆர்.ஆர்.ஆர்’, ‘கேஜிஎப்’ படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துக்கொண்டிருந்த நேரம் அது.
பொருட்களுக்கு லேபிள் இடும் பழக்கம் மக்களிடம் இருக்கிறது. ஒருவேளை ராஜமவுலி ஒடிசாவிலோ, குஜராத்திலோ பிறந்ததிருந்தால் அவர் இந்த மாதிரியான படங்களைத் தான் இயக்கியிருப்பார். நான் தற்போது அரசியல் த்ரில்லர் படம் ஒன்றில் கவனம் செலுத்தி வருகிறேன். விரைவில் இந்தி படம் ஒன்றை இயக்குவேன்” என்று கூறினார்.