இந்த முறை இறுதி தடையை கடக்க வேண்டும் – ரோகித் சர்மா பேச்சு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நாளை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.

இந்திய அணி 2011ஆம் ஆண்டு டோனி தலைமையில் ஐசிசி உலக கோப்பையை கைப்பற்றியது. அதன் பின் எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் வென்றது கிடையாது. ஐசிசி தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும். ஆனால் நாக் அவுட், அரையிறுதி போட்டி ஆகியவற்றில் கோட்டை விட்டு கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்து ஏமாற்றம் அடையும்.

கடந்த முறை நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. தற்போது ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாட இருக்கிறது. ஆனால் இந்த முறை அந்த தடையை தகர்த்து எறிவோம் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐசிசி நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேட் கம்மின்ஸ், ராஸ் டெய்லர், இயான் பெல் ஆகிய முன்னணி வீரர்கள் மத்தியில் ரோகித் சர்மா பேசியதாவது:

இறுதிப்போட்டி சவாலாகவே இருக்கும். பொதுவாக ஓவல் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும். இந்த சவாலையே விரும்புகிறோம். நிலைத்து நின்று ஆடினால் மட்டுமே இங்கு ரன் சேர்க்க முடியும். போட்டியை கவனமாக எதிர்நோக்கினால் சிறப்பான ஆட்டம் வெளிப்படும்.

கடந்த இரண்டு மூன்று வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வெற்றியை பெற்றுள்ளோம். இந்த முறை இறுதி தடையை கடக்கவேண்டும். அந்த நம்பிக்கையை இளம் வீரர்களுக்கு கொடுக்க வேண்டும். இதன்மூலம் அவர்கள் விளையாட விரும்பும் விதத்தில் அவர்களை ஆடவைக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools