Tamilவிளையாட்டு

இந்த ஐபிஎல் சீசனில் இரண்டு சாதனை பட்டியலில் இணைய உள்ள டோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி 22 ரன்கள் அடித்தால் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 5000 ரன்கள் கடந்த 7ஆவது வீரர் என்ற சாதனையை படைப்பார். 16-வது சீசனுக்காக கிரிக்கெட் திருவிழா இன்று பிரம்மாண்டமாக தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

ஐபிஎல் தொடரில் இதுவரையில் டோனி 229 சிக்சர்கள் அடித்துள்ளார். அதிக சிக்சர்கள் அடித்தவர்களின் பட்டியலில் 4-வது இடம் பிடித்துள்ளார். இந்த சீசனில் 21 சிக்சர்கள் அடித்தால் அவர் 250 சிக்சர்கள் அடித்து புதிய சாதனை படைப்பார். இதற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் 240 சிக்சர்கள் அடித்து 3-வது இடத்தில் இருக்கிறார்.

கடந்த 2008-ம் ஆண்டு முதல் விளையாடி வரும் எம்எஸ் டோனி, இதுவரையில் 234 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால், 206 இன்னிங்சில் மட்டும் விளையாடிய டோனி 4,978 ரன்கள் எடுத்துள்ளார். இந்நிலையில் டோனி 22 ரன்கள் சேர்த்தால், ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 5000 ரன்கள் எடுத்த 7ஆவது வீரர் என்ற சாதனையை படைப்பார்.

இதற்கு முன்னதாக 5000 ரன்களுக்கு மேல் எடுத்தவர்கள் பட்டியலில் உள்ள வீரர்கள் விபரம்:-

விராட் கோலி – 223 போட்டிகள் – 6624 ரன்கள்

ஷிகர் தவான் – 206 போட்டிகள் – 6224 ரன்கள்

டேவிட் வார்னர் – 162 போட்டிகள் – 5881 ரன்கள்

ரோகித் சர்மா – 227 போட்டிகள் – 5879 ரன்கள்

சுரேஷ் ரெய்னா – 205 போட்டிகள் – 5528 ரன்கள்

ஏபி டிவிலியர்ஸ் – 184 போட்டிகள் – 5162 ரன்கள்