இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் – வானிலை மையம்

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு, கோடை வெயில் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-

மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடை காலம். இந்த ஆண்டு இந்த காலக்கட்டத்தில் அதிக அளவு வெயிலின் தாக்கம் இருக்கும்.

இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு ராஜஸ்தான், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வழக்கமான வெப்பநிலை காணப்படும்.

வடகிழக்கு, மேற்கு, மத்திய இந்தியாவிலும், சில தென்பகுதிகளிலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். வழக்கமாக அடிக்கும் வெயிலைவிட கூடுதலாக ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பம் வரை அதிகரிக்கும்.

தென் இந்தியாவில் ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள், தெலுங்கானாவின் சில பகுதிகளில் வெப்பம் மிகவும் அதிகமாக இருக்கும். மற்ற பகுதிகளிலும் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக இருக்கும்.

மார்ச் முதல் மே மாதம் வரை இந்த வெப்பம் நீடிக்கும். ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கும் இந்த ஆண்டு பருவ மழை வழக்கம் போல் இருக்கும்.

இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெயில் அதிகரித்து விட்டது. எனவே, கோடை காலத்தில் வழக்கத்தைவிட அதிக வெப்பம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கேரளாவில் கடந்த மாதமே 33 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் அடிக்க தொடங்கியது. எனவே, கோடையில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news