இந்த ஆண்டு நிறைய படங்களில் நடிப்பேன்! – சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:

கடந்த 2018-ம் ஆண்டில் ஒரு நடிகராக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக என்று பல முயற்சிகள் செய்து இருந்தேன். இவை அனைத்திற்கும் உங்களின் வரவேற்பு நன்றாகவே இருந்தது. இந்த வரவேற்புதான் நம்பிக்கையை கொடுக்கிறது.

இந்த நம்பிக்கை தான், நல்ல நல்ல முயற்சிகளைச் செய்யத் தூண்டுகிறது. ‘கனா’ படத்தின் ‘வாயாடி பெத்த புள்ள’ பாடலுக்கு நீங்கள் எல்லோரும் கொடுத்த வரவேற்பும் பாராட்டும் ஆசீர்வாதமும் மறக்கவே முடியாதது. மகள் ஆராதனா பாடிய முதல் பாடல் இது.

நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு நண்பர்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கிய ‘கனா’ படத்தைக் கொண்டாடி விட்டீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்த உற்சாகத்துடன் இன்னும் பல நல்ல வி‌ஷயங்களைச் செய்யவேண்டும் என்கிற முனைப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த வருடமும் நிறைய படங்களில் நடிக்கிறேன். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்.

எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் இந்த மாதத்தில் வர இருக்கிறது. தொடர்ந்து உங்கள் ஆதரவு வேண்டும். மீண்டும் எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்’.

இவ்வாறு சிவகார்த்தி கேயன் தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools